பெண் மனம்
- சு. பிரபா, புதுச்சேரி.
ஏ ! சமூகமே !
அனைவரும் உன்
பிள்ளைகள், அதில்
நானும் ஒருத்தி
மறுஜென்மம் என்று
ஒள்றிருந்தால் அதில்-இதே
பெண்ணாகப் பிறக்க
வாய்ப்புக் கொடு !
வாய்ப்புக் கொடு !
அப்பொழுதாவது – எனக்குச்
சிறந்த –
கல்விக் கொடு !
கல்விக் கொடு ! !