கவிதை
அன்பான என் தோழிக்கு ஆசையாய் ஓர் கடிதம்…..
கிரன்
கண்கள் சொல்கின்றன
உனைக்
காண வேண்டுமென்று ;
இதயம் சொல்கிறது
உன்னுடன்
இனைய வேண்டுமெனறு;
இரணடற அல்ல,
ஒன்றாய் ;
ஒன்றுடன் ஒன்றாய்;
மனம் சொல்கிறது உன்னுடன்
மகிழ்ச்சியுடன்
பேசிக் கொண்டேயிருக்க
வேண்டுமென்று;
கால்கள் சொல்கின்றன
உன்னுடன்
காலாற சற்றே
நடக்கவேண்டுமென்று ;
கைகள் சொல்கின்றன உன்
கரங்கள் பிடித்து இந்த
உலகையே
உலா வர வேணடுமென்று;
உண்மையிலேயே
ஏதேனும் ஒரு
வேணடுகோளுக்கு
இணங்கலாம் என்றால்……
“உரிமையில்லா நட்பு
என்றும் நிரந்தரமில்லை” என்று
உன் உதட்டோரங்களில்
வெளிவந்த வார்த்தைகளே,
என் நினைவுகளில்
இன்றும் நிஜங்களாய்……
நீயோ என்
நினைவலைகளி்ல்
என்றென்றும்
!!!