கவிதை
அன்பே
ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI
உயர் மேலாளர், SR.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM
அன்பே…, உனை ஆசையுடன்
அணைத்துக்கொள்வதா
இல்லை
செல்லமாகத்தான்
கடிந்து கொள்வதா
ஏதும்
இயலவில்லையே
ஏனோ
புரியவில்லையே
மிக அருகில்
வந்தால் நான்
வெகு
தொலைவில்
அல்லவா
செல்கின்றாய்
நீ
இதுதான்
நெருக்கத்தின் நெறிமுறையோ
அதிக
ஆத்மார்த்தமான அன்பின் அடையாளமோ