
கலைமகளின் வரம் பெற்று,
கல்வியின் கரம் பற்றி
வெள்ளிச் சிறையை விட்டு,
வெளிவந்த பேண்ணினமே !
மெல்லினம் நீ என்று
எள்ளிநகை செய்தோரை,
‘புல்’ இனமாய் நீ நினைத்து,
புறப்பட்டாய் புயலெனவே !
சோதனைகள் பல கடந்து,
சாதனைகள் நீ படைத்தாய்
வேதனைகள் இனி இல்லை,
வெற்றி ஒன்றே உன் எல்லை !
இரண்டில் ஒரு பங்காய்
இங்கு நீ இருக்கையிலே,
முடியாமல் போகாது
மூன்றில் ஒரு பங்கு !
முடியுமென்று முயலுங்கள்
முடியாதது ஒன்றுமில்லை !
மண்ணுலகம் பொன்னுலகாய்,
மாறிவிடும் உன்னாலே !