Thursday, December 6, 2012

கவிதை - “உருவே குருவே சரணம்”


உருவே குருவே சரணம்













-J. Subramani,(Ph.D), Chennai



பேனாக்கள் மையுருக பொய்யுருகும்
உன் நானாக்கள் பொய்யுருகா மெய்யுருக
கனாக்கள் கண்ணுரங்கும்
சமீக்ஷைகள் அறிந்த சூட்சுமமே
உலகுள்ளவரை ஆளும் ராஜ்ஜியத்தின் இசை ராஜாவே!
சொல்லாததும் வெல்லாததும் இல்லாதது இனி இசையில்
புரிதலும்அறிதலும் யுகமறியம் இசை மேஸ்ட்ரோவே
ஓங்கார ஒலி கேட்டு ஓவியமும் தலையசையும்
சிற்பமும் கண்ணீர் கசியும்
இசை ஜீ(வா) ஜீவனை கிரகித்து உயிர்பிக்கும்
ஈரம் சொறிந்த பிம்பம் நீ ! பிரம்மன் நீ!
உன் விரல் குனிய இசை நிமிரும்
வேடங்கள் துறந்த வெளியே இருந்தாலும் நீ இமயம்
இனி பிறந்தாலும் நீ இமயம்         
இசை மறையே பேரருளே
வாய்ப்பிருந்தும் வார்த்தைகள் எழா
எழுந்து நின்று தலை வணங்குவோம் போற்றுவோம்
இசை பிரணவனே உருவே குருவே சரணம்

Friday, November 9, 2012

கவிதை - மகாத்மா காந்தி




கவிதை       

மகாத்மா காந்தி


ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.



மாமனிதர் மகாத்மா
மனிதருள் மாணிக்கம்
மகான்களுள் மேதை
     அத்தகைய
மேதை குறித்து
மகிழ்ச்சிப்புகழ் மாலை
தொடுத்திட,
மன நிறைவினால்
       எனக்கு வார்த்தை
மலர்கள் போதவில்லை!!


வாய்மையே வெல்லும்
என்பது அவர் நமக்கு
தந்திட்ட தெய்வ வாக்கு !


போர் முனையில் பயன்படுத்தும்
வாளின் முனையைவிட
எழுதுகோலின் முனையே
கூர்மையானது   என்பது
அவர் எண்ணம் ;
அசைக்க முடியாத
நம்பிக்கை ;  அவர்
உலகிற்கு எடுத்துரைத்த
உண்மை ;
அது மட்டுமல்லாமல் ,
முனைப்புடன் முழுமூச்சுடன்
முயன்று போராடுவோருக்கு
முன்னின்று கை கொடுத்தவர் !!


போராடினார் தன்
இறுதி மூச்சுவரை-
இந்தியாவின் சுதந்திரத்திற்கு !
வாழ்நாட்கள் முழுவதையும்
இதயப்பூர்வமாக
இந்தியாவுக்கு அர்ப்பணித்து !!

தன் ஆன்மாவை
அன்பு” , அகிம்சை
என்பவற்றினால் சுத்திகரித்து ;
மகா ஆத்மாவாகவே
மாறி வாழ்ந்து,
மதயானையாய் தலைவிரித்தாடும்
மதக்கலவரத்தை
அறவே ஒழித்தவர் !!

தன் அகிம்சை எனும்
அறவழிக்  கொள்கையினால்
அனைவரது உள்ளத்தையும்
கொள்ளை கொண்டவர் !!
சத்யாக் கிரகம் என்னும்
போராட்டத்தினால்
சதிகார வெள்ளையர்களை
                 வெளியே துரத்தியவர் !!

மகாத்மாவின் கொள்கைகளையே
நாமும் பின்பற்றுவோம் !!
நலம்பல நாடுவோம் !!
அவரைப் போற்றி,
நாளும் வணங்கிடுவோம் !!
ஜெய்ஹிந்த் !  ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !   ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !   ஜெய்ஹிந்த் !!

Thursday, November 8, 2012

கவிதை - அழகிய அப்துல்கலாமே …..




கவிதை        

அழகிய அப்துல்கலாமே …..



ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.


அழகிய
அப்துல்கலாமே…….எங்கள்
ஆசிய ஜோதியே !!!
அனைவரது
உள்ளத்திலும் நீ
உயர்ந்து நிற்கும்
ஊன்றுகோல்!!
இந்திய மண்ணுக்கு
பெருமை சேர்த்து - எங்களது
இதயங்களை
கொள்ளை கொண்டாய் !!!

இராமேஸ்வரத்தில்
இஸ்லாமிய குடும்பத்தில்
பிறந்து, படிப்பதற்கு
சிறுவயதில்
இயலாமையினால்
   கஷ்டப்பட்டாலும்
இன்று உன் முயற்சியால்,
உழைப்பினால்
இந்திய தேசிய
கொடியாகப் போற்றி ;
வணங்கும் அளவுக்கு;
உயர்ந்து உள்ளாய் !!

 '' வாழ்க   வளமுடன் !!
 என்றென்றும் நிறைவுடன் !!! ''

Wednesday, August 15, 2012

தவிர்ப்போமே!! சாலை விபத்துக்களை…


கவிதை
தவிர்ப்போமே!! சாலை விபத்துக்களை









ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI


சந்திப்போமாசாலை விபத்துக்களை
இல்லை!! இல்லை !!
சிந்திப்போமே ! சிரத்தையாய் …..
சிறிதளவேனும்…..நம்
சிந்தையில் பாதுகாப்பின்
இன்றியமையாமை உணர்ந்து !!
உள்ளத்தில் உறுதி மொழி
எடுத்துக் கொள்வோமே !!
இன்று முதலே,இக்கணப் பொழுது முதலே,
தவிர்ப்போம்சாலை விபத்துக்களை
என்று !!

விபத்தினால் வரும்
உயிரின் இழப்பு
உனக்குப் புரியாததா….
ஆகும் பொருள்
சேதங்களைப் பற்றி
அறியாயோ…. இல்லை,
அறிய பொறுமை
இல்லையா……

கொஞ்சம் கவனம்
உன் செயல்பாடுகளில் !!
அதிகமான கவனம்
உன் அணுகுமுறையில் !!
பாதுகாப்புக்காக பணியாற்றுவேன்
என்ற மனப்பாங்கு கொண்டு
நித்தம்நித்தம்
செயல்படுவோமேயானால்……
நிம்மதிப் பெருமூச்சு
எப்போதும் நம் நெஞ்சினில்!!
சிந்திப்போமே !!
தவிர்ப்பு முறைகள் பற்றி;
தவிர்ப்போமே!! சாலை விபத்துக்களை

# துணை மேலாளர் / DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN PETROLEUM
சென்னை /CHENNAI

Thursday, July 12, 2012

கவிதை - எழுந்து நில் எழுச்சியுடன்


எழுந்து நில் எழுச்சியுடன்


ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI*


நண்பா... ஆம்!! எழுந்து நில்!
எழுச்சியுடன்!!!

அலுவலகத்துக்கு ஆளோடு
ஆளாக வருகை தருவதோடு
மட்டுமல்லாமல்,
அலுவலகப் பணியை
அலுப்பே இல்லாமல்
பணியாற்று தோழா!!

மாலைகள் தன்னாலே
வந்து குவியும் உன் தோளில்!!
மனமுவந்து மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்!!
மற்ற பணியாளர்களுடன்
மாற்றானைப் பற்றி
புறணி பேசுவதை
நிறுத்தி விடு!!  நண்பா

புத்தி்க் கூர்மை கொண்டு
புரட்சிகள் பல படைத்திடு;
சக பணியாளர் தோழர்களுடன்
கூட்டணி அமைத்து !!
புரட்சித்தாயின் புத்திரனாய்
புகழ்பல படைத்திடு!!

"அன்பே சிவம்"
"அன்பே கடவுள்"
"அன்பே அல்லா"
"அன்பே தேவன்"
என்று எத்தனை வழிகளில்
திரித்துக் கூறினாலும்,
அனைத்து செயல்களுக்கும்
"அன்பு" ஒன்றுதானே அடிப்படை!!!

அன்போடு பழகு;
அனைத்து உயிர்களிடமும்!!
அண்ட சராசரமும்
அடிபணியும்; உன் அன்புக்கு!!
மணித்துளிகள் பல
மயக்கத்தில் ஆழ்ந்திடாதே!!
சில நிமிடங்களே ஆனாலும்;பிறரை
சிலிர்க்க வைத்திடும்
சாதனைகள் செய்திடு !!
சிந்திக்க வைத்திடும்
சிரிப்பினால்
சிந்திக்க வைத்திடு !!நண்பா...

துணை மேலாளர் / DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN PETROLEUM
சென்னை /CHENNAI