Tuesday, January 22, 2013

கவிதை - பிறந்த நாள் வாழ்த்து


கவிதை       
பிறந்த நாள் வாழ்த்து









ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.



பிறரின் உணர்ச்சிகளை
பட்டப்பகலாய்   
தெள்ளத் தெளிவுடன்
தெரிந்து கொள்கிறாய்!! 
தன் உணர்வுபோல்
உணர்ந்தும் கொள்கிறாய்!!
உற்றாரிடமும் ,உறவினரிடமும்,
சக பணியாளர்
தோழர்களிடத்திலும்
உன்னைச் சுற்றியள்ள
அனைவரிடமும் அன்புடன்
பார்த்து பதமாகப்
பழகுகிறாய் மிகவும் பண்புடன்
பிறரை பிஞ்சுக் கன்றுகளாய்
என்றெண்ணி
எவ்வித`   `
இடையூறுமின்றி
இன்னிசையாய் வந்து
செல்கிறாய்
தவறில்லை என்று
தெரிந்தும் தயக்கமுடன் நிற்கின்றாய்
வேண்டியதை வேண்டியதற்கு
எந்தவித பாடத்திலும்
எவ்வித ஐயவினா
எவர் தொடுத்தாலும்
என்ற ஆரம்ப எழுத்தில் `
தொடங்கி
ஆயுத எழுத்து என்ற இறுதி
எழுத்து வரை நீடித்து
விளக்குகிறாய்
இவையனைத்தும் மிகவும்
அரிதான நற்குணங்களே
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு அன்றோ
இந்த தமிழ்பழமொழியை
நீ அறியாயோ
பிறந்தநாள் கொண்டாடும்
அனறு எனக்கொன்றும்
கவிதை இல்லையா
என்று வினாவினாயே
அந்த வினாவின்
விடையாக இன்று
என்னால் முடிந்த
சில வரிகள் சின்னதாய்
வளர்ச்சி என்பது
வயதில் அல்ல
அறிவின் ஆழத்தில்
அன்பான இதயத்தில்
அழகிய உள்ளத்தில்
இவையனைத்திலும் நீ
உயர்ந்து நிற்கின்றாய்
வளர்ச்சியடைந்துள்ளாய்
இன்று பிறந்தோம்
புதிதாய் என்றெண்ணி
தினம்தோறும்
தித்திப்பு நாட்களுடன்
நீ நித்தம் ஒரு
நல்ல மனப்பாங்குடன்
ஆயிரமாயிரம் காலஙகள்
ஆரோக்கியமுடன்
மலர்ச்சிப் பூக்களாய்
புன்னகை பூத்து
குடும்பத்துடன்
சந்தோசமாக குளைத்து
இனிதே வாழ வாழ்த்தும் பண்பு மாணவி…..

No comments:

Post a Comment