Tuesday, January 9, 2024

கவிதை - எழுந்து நில் எழுச்சியுடன்


கவிதை                      எழுந்து நில் எழுச்சியுடன்

. அஞ்சலி தேவி, A ANJALI DEVI, 

உயர் மேலாளர், SR.MANAGER,

இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM


நண்பா ஆம்!! எழுந்து நில்!

எழுச்சியுடன்!!!

 

அலுவலகத்துக்கு ஆளோடு

ஆளாக வருகை தருவதோடு

மட்டுமல்லாமல்,

அலுவலகப் பணியை

அலுப்பே இல்லாமல்

பணியாற்று தோழா!!

 

மாலைகள் தன்னாலே

வந்து குவியும் உன் தோளில்!!

மனமுவந்து மகிழ்ச்சியுடன்

ஏற்றுக்கொள்!!

மற்ற பணியாளர்களுடன்

மாற்றானைப் பற்றி

புறணி பேசுவதை

நிறுத்தி விடு !!  நண்பா

 

புத்தி்க் கூர்மை கொண்டு

புரட்சிகள் பல படைத்திடு;

சக பணியாளர் தோழர்களுடன்

கூட்டணி அமைத்து !!

புரட்சித்தாயின் புத்திரனாய்

புகழ்  பல படைத்திடு!!

 

அன்பே சிவம்

அன்பே கடவுள்

அன்பே அல்லா

அன்பே தேவன்

என்று எத்தனை வழிகளில்

திரித்துக் கூறினாலும்,

அனைத்து செயல்களுக்கும்

அன்பு ஒன்றுதானே அடிப்படை!!!

 

அன்போடு பழகு;

அனைத்து உயிர்களிடமும்!!

அண்ட சராசரமும்

அடிபணியும்; உன் அன்புக்கு!!

மணித்துளிகள் பல

மயக்கத்தில் ஆழ்ந்திடாதே!!

சில நிமிடங்களே ஆனாலும்; பிறரை

சிலிர்க்க வைத்திடும்

சாதனைகள் செய்திடு !!

சிந்திக்க வைத்திடும்

சிரிப்பினால்

சிந்திக்க வைத்திடு !!  நண்பா

No comments:

Post a Comment