Thursday, July 12, 2012

கவிதை - எழுந்து நில் எழுச்சியுடன்


எழுந்து நில் எழுச்சியுடன்


ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI*


நண்பா... ஆம்!! எழுந்து நில்!
எழுச்சியுடன்!!!

அலுவலகத்துக்கு ஆளோடு
ஆளாக வருகை தருவதோடு
மட்டுமல்லாமல்,
அலுவலகப் பணியை
அலுப்பே இல்லாமல்
பணியாற்று தோழா!!

மாலைகள் தன்னாலே
வந்து குவியும் உன் தோளில்!!
மனமுவந்து மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்!!
மற்ற பணியாளர்களுடன்
மாற்றானைப் பற்றி
புறணி பேசுவதை
நிறுத்தி விடு!!  நண்பா

புத்தி்க் கூர்மை கொண்டு
புரட்சிகள் பல படைத்திடு;
சக பணியாளர் தோழர்களுடன்
கூட்டணி அமைத்து !!
புரட்சித்தாயின் புத்திரனாய்
புகழ்பல படைத்திடு!!

"அன்பே சிவம்"
"அன்பே கடவுள்"
"அன்பே அல்லா"
"அன்பே தேவன்"
என்று எத்தனை வழிகளில்
திரித்துக் கூறினாலும்,
அனைத்து செயல்களுக்கும்
"அன்பு" ஒன்றுதானே அடிப்படை!!!

அன்போடு பழகு;
அனைத்து உயிர்களிடமும்!!
அண்ட சராசரமும்
அடிபணியும்; உன் அன்புக்கு!!
மணித்துளிகள் பல
மயக்கத்தில் ஆழ்ந்திடாதே!!
சில நிமிடங்களே ஆனாலும்;பிறரை
சிலிர்க்க வைத்திடும்
சாதனைகள் செய்திடு !!
சிந்திக்க வைத்திடும்
சிரிப்பினால்
சிந்திக்க வைத்திடு !!நண்பா...

துணை மேலாளர் / DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN PETROLEUM
சென்னை /CHENNAI



Tuesday, July 3, 2012

கவிதை - முன்னேறு முன்னேறு

கவிதை   

முன்னேறு முன்னேறு 

ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI
துணை மேலாளர் /DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN PETROLEUM
சென்னை /CHENNAI




























முன்னேறு முன்னேறு !!
முடிந்தவரை முன்னேறு !!
முடியாதது ஒன்றுமில்லை உன்னால்
முயற்சி உன் கையில் !
முயற்சியோடுமுன்னேறு !!

எழுந்து கூட நிற்க இயலவில்லை
என் உடல் ஒத்துழைக்கவில்லையே
என்று எண்ணாதே !!
எழுச்சி உன்
இளமையான இதயத்தில்!!
இறுமாப்புடன் போராடு !!
எழுச்சியுடன்முன்னேறு !!


ஒவ்வொரு நாளும்
உனக்கு
புதியதோர் பிறப்பே !!
இன்று பிறந்தேன்….
இனிமையான வசந்த காலம்
என்றென்றும் உள்ளது
என்று எண்ணி
இறுதிவரை போராடு !!
இறுதிவரைமுன்னேறு !!
முன்னேறு முன்னேறு !!
இறுதிவரைமுன்னேறு !!

வானத்திற்கும் எல்லை உண்டு !!
வாஞ்சையான உன்
முயற்சிகளுக்கு எல்லையுமில்லை;
முடிவுமில்லை !!
வாஞ்சையுடன் போராடு !!
வாழ்வில் வளமாய்
முன்னேறு முன்னேறு !!

Monday, July 2, 2012

கவிதை - அன்புத்தாய்


கவிதை

அன்புத்தாய்

ஆ. அஞ்சலி தேவி / A ANJALI DEVI
துணை மேலாளர் /DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN PETROLEUM
சென்னை /CHENNAI



தாய் தரணியின் தாரக மந்திரம்
தர்மத்தின் தலைவி !!

கும்பிடக்கூடிய குடும்ப விளக்கு
தனக்கு உணவில்லாவிடினும்
தனது குழந்தைக்கு
அமுதூட்டுபவள் அன்புடன் !!


அன்பின் அடிப்படை இலக்கணம்
அழுது அல்லாடும் குழந்தையை
அன்புடன் அரவணைக்கும்
கனிவுத்தாய்  !!
தாய் தரமான பணிவிடையின்
ஐ.எஸ்.ஐ முத்திரை !
தரத்தின் சான்று !!
தவறு செய்து தயங்கி
நின்ற போதினிலும்,
தானே மனமுவந்து,
அவளிடம் தஞ்சம் புகுந்திட
வைத்திடும் சக்தி
சரஸ்வதி தேவி !!



பொறுமையின் பொக்கிஷம் !
பண்பின் அடக்கம்! பணிவிடையின் ஊற்று!
பசி என்று வருவோர்க்கு
பாலை வார்த்திடும் பாசத்தாய் !!


அகில உலகமும் போற்றும்
அன்புத்தாயை போற்றிடுவோம்
நாமும், என்றென்றும் !!!