கவிதை
முன்னேறு முன்னேறு
![]() | |
ஆ. அஞ்சலி தேவி / A ANJALI
DEVI
துணை மேலாளர் /DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN
PETROLEUM
சென்னை /CHENNAI
|
முன்னேறு முன்னேறு !!
முடிந்தவரை முன்னேறு !!
முடியாதது ஒன்றுமில்லை உன்னால் …
முயற்சி உன் கையில் !
முயற்சியோடுமுன்னேறு !!
எழுந்து கூட நிற்க இயலவில்லை …
என் உடல் ஒத்துழைக்கவில்லையே …
என்று எண்ணாதே !!
எழுச்சி உன்
இளமையான இதயத்தில்!!
இறுமாப்புடன் போராடு !!
எழுச்சியுடன்முன்னேறு !!
ஒவ்வொரு நாளும்
உனக்கு
புதியதோர் பிறப்பே !!
இன்று பிறந்தேன்….
இனிமையான வசந்த காலம்
என்றென்றும் உள்ளது
என்று எண்ணி
இறுதிவரை போராடு !!
இறுதிவரைமுன்னேறு !!
முன்னேறு முன்னேறு !!
இறுதிவரைமுன்னேறு !!
வானத்திற்கும் எல்லை உண்டு !!
வாஞ்சையான உன்
முயற்சிகளுக்கு எல்லையுமில்லை;
முடிவுமில்லை !!
வாஞ்சையுடன் போராடு !!
வாழ்வில் வளமாய்
முன்னேறு முன்னேறு !!
No comments:
Post a Comment