கவிதை
அன்புத்தாய்
ஆ. அஞ்சலி தேவி / A ANJALI
DEVI
துணை மேலாளர் /DY.MANAGER
இந்துஸ்தான் பெட்ரோலியம் /HINDUSTAN
PETROLEUM
சென்னை /CHENNAI
தாய் தரணியின்
தாரக மந்திரம்
தர்மத்தின் தலைவி !!
கும்பிடக்கூடிய
குடும்ப விளக்கு
தனக்கு
உணவில்லாவிடினும்
தனது குழந்தைக்கு
அமுதூட்டுபவள்
அன்புடன்
!!
அன்பின் அடிப்படை
இலக்கணம்
அழுது அல்லாடும்
குழந்தையை
அன்புடன்
அரவணைக்கும்
கனிவுத்தாய் !!
தாய் தரமான பணிவிடையின்
ஐ.எஸ்.ஐ முத்திரை !
தரத்தின் சான்று !!
நின்ற போதினிலும்,
தானே மனமுவந்து,
அவளிடம் தஞ்சம் புகுந்திட
வைத்திடும் சக்தி
சரஸ்வதி தேவி !!
பொறுமையின் பொக்கிஷம் !
பண்பின் அடக்கம்! பணிவிடையின் ஊற்று!
பசி என்று வருவோர்க்கு
பாலை வார்த்திடும் பாசத்தாய் !!
அகில உலகமும் போற்றும்
அன்புத்தாயை போற்றிடுவோம்
நாமும், என்றென்றும் !!!
Poem on mothers love,affection and protection very very heart touching
ReplyDeletekavithaigal unarvin velipadu. kavidyini anjali andha unarvai kondu vandirukirar. vazthukal.
ReplyDelete