Tuesday, October 13, 2015

கூட்டுக்குடும்பம்

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.

கவிதை                                   கூட்டுக்குடும்பம்

வாழ்ந்தோம் !
இயற்கையோடு இணைந்து ;
கூட்டுக்குடும்பமாய் அன்று  !
மனிதர்கள்
மரங்களோடு  இணைந்து ;
பறவைகள்
கூடுகளோடு இணைந்து  ;
கூடுகள்
மரங்களோடு  இணைந்து ;
புழு பூச்சிகள்
புற்களை உண்டு களித்து  !!
இன்றோ கூடுகளும்
இல்லை
கூட்டுக்குடும்பங்களும்

இல்லை !!

Monday, October 12, 2015

கௌரவ விருது

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.
கவிதை                                 கௌரவ விருது


சிந்தனையாளனாய்,
சிறந்து சிரத்தையுடன்,
பணியாற்றுவோரை,
கௌரவிக்கும் விருது !!

தன் அயராத
உழைப்பினாலும்,
மிகுந்த தன் ஆர்வத்துடனும்,
முனைந்து  பணியாற்றி,
நிறுவனத்தை
அளவில்லா ஆனந்தத்தில்
ஆழ்த்தும்படி
பணியாற்றுவோரை,  
சிறப்பிக்கப்படுவதற்காக
வழங்கப்படும்
விருது !!

தனக்கு அளிக்கப்பட்டுள்ள
கடமைகளை மட்டுமல்லாமல்,
பொறுப்புணர்ச்சியுடன்,
மற்ற அனைத்து
பணிகளையும்,
தானே மனமுவந்து
மகிழ்ச்சியுடன் ஏற்று,
செய்வோருக்காக
கிடைக்கப் பெற்ற
மர்மப்புதையல் !!

நிறுவனத்தின்
இலக்குகளை, தன்
இலக்காக கொண்டு,
தன்னால் இயன்றவரை
சாதிக்கும் சாதனையாளருக்காக,
இயற்றப்பட்ட
இன்னிசை மழை !!

நம் நிறுவனத்தை
நிலையான
வெற்றிப்பாதையில்
நிலைநாட்ட,
பாடுபட்டு, பங்குபெற்றோருக்கெல்லாம்,
நிறுவனம்
அவர்களை அங்கீகரித்து
அளிககப்படும்
பொருட்செல்வம்  !!
பெருமையான
பொக்கிஷமே நம் 
கௌரவ விருது !!!.

இன்று கௌரவ விருது 
வாங்கி தம் வாழ்வில்
கௌரவமாய்,
வெற்றிப் படிகளில்
நடைபோட்டுக் கொண்டிருக்கும்,
நம்மோடு பணிபுரியும்,
 சக தோழி தோழர்களை,
 இருகரம் கூப்பி,
  இணைந்து
  வாழ்த்துவோம் !!

  வணங்குவோம் !!  வாருங்கள் !!!

Sunday, October 11, 2015

பற்றாக்குறை

ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.

கவிதை                                   பற்றாக்குறை

அழும் குழந்தைக்கு
பால் இல்லையாம்  !
ஆனால் அங்கே
அபிஷேகம் பாலினால்
அம்பாளுக்கு !!
பால் பற்றாக்குறையா….
இல்லை
மனப்பாங்கு பற்றாக்குறையா…..

இதில் ?