ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.
கவிதை கௌரவ விருது
சிந்தனையாளனாய்,
சிறந்து சிரத்தையுடன்,
பணியாற்றுவோரை,
கௌரவிக்கும் விருது !!
தன் அயராத
உழைப்பினாலும்,
மிகுந்த தன் ஆர்வத்துடனும்,
முனைந்து பணியாற்றி,
நிறுவனத்தை
அளவில்லா ஆனந்தத்தில்
ஆழ்த்தும்படி
பணியாற்றுவோரை,
சிறப்பிக்கப்படுவதற்காக
வழங்கப்படும்
விருது !!
தனக்கு அளிக்கப்பட்டுள்ள
கடமைகளை மட்டுமல்லாமல்,
பொறுப்புணர்ச்சியுடன்,
மற்ற அனைத்து
பணிகளையும்,
தானே மனமுவந்து
மகிழ்ச்சியுடன் ஏற்று,
செய்வோருக்காக
கிடைக்கப் பெற்ற
மர்மப்புதையல் !!
நிறுவனத்தின்
இலக்குகளை, தன்
இலக்காக கொண்டு,
தன்னால் இயன்றவரை
சாதிக்கும் சாதனையாளருக்காக,
இயற்றப்பட்ட
இன்னிசை மழை !!
நம் நிறுவனத்தை
நிலையான
வெற்றிப்பாதையில்
நிலைநாட்ட,
பாடுபட்டு, பங்குபெற்றோருக்கெல்லாம்,
நிறுவனம்
அவர்களை
அங்கீகரித்து
அளிககப்படும்
பொருட்செல்வம்
!!
பெருமையான
பொக்கிஷமே
நம்
கௌரவ விருது !!!.
இன்று கௌரவ
விருது
வாங்கி தம்
வாழ்வில்
கௌரவமாய்,
வெற்றிப்
படிகளில்
நடைபோட்டுக்
கொண்டிருக்கும்,
நம்மோடு
பணிபுரியும்,
சக தோழி தோழர்களை,
இருகரம் கூப்பி,
இணைந்து
வாழ்த்துவோம் !!
வணங்குவோம் !! வாருங்கள் !!!
மிக அருமையான கவிதை.
ReplyDeleteமேன். மேலும் வளர, சினிமா பாடல் எழுத இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Mikka Mikka Nanri thangalin Prarthanaihaluku.
ReplyDelete