Friday, April 17, 2009

கவிதை


தமிழருவி



- கே. சுபஸ்ரீ, கோவை.



மலையின் ஏற்றத்தில் –
அலையின் பாய்ச்சலில் –
அருவியின் துளிகளில்
உருகி வழியும் தமிழ் !
பாக்களில் கவிஞரும்
பூக்களாய் புலவரும்
விழிகளுள் இட்டு
எமாழியின் இசையை –
நெஞ்சம் தொட
கொஞ்சும் தமிழ் பாவை;
இனிய பூஞ்சோலையில்
பனித்துளியாய் தமிழ் –
குயில்களின் பாடலில் –
மயில்களின் ஆடலில்
காற்றின் உரசலில்
ஆற்றின் கரையில்
மாங்கனியின் இனிப்பில் –
தங்கத்தின் ஒளியில்
ஓடி வரும் மழலையில் –
தேடிச் செல்லும் இறைவனில்
பொங்கிப் பெருகும் அன்பினில்
பெருகி ஓடும் மகிழ்வில் –
கண்டேன் திகட்டாத தமிழமுதை !
கொண்டேன் உயிரினும் மேலாய் !
ஒங்கு புகழ் வான் வையகம் –
எங்கும் தழைத்திருக்க தமிழொலி
நீங்காதிருக்க வாழ்த்துவோம்
மங்காத புகழ் தமிழ்த்தாயை !
அழகில் நங்கையான தமிழிசையை
முழங்குவோம் முரசொலி கொட்டி –
செம்மொழியாம் இம்மொழியில்
அம்மை அப்பனைக் கண்டேன் !
கனியமுதான தமிழ் மொழியின்
தனிச்சிறப்பு திக்கெட்டும் பரவட்டும் !

No comments:

Post a Comment