கவிதை
குடியரசு தினம்
ஆ. அஞ்சலி தேவி, A
ANJALI DEVI,
துணை மேலாளர்,
DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம்,
HINDUSTAN PETROLEUM,
சென்னை,
CHENNAI.
குடியரசு தினம்
இந்தியா குடியரசு
நாடான தினம்
!
இந்தியா இனிதே
வல்லரசு நாடாய்
வலிமை பெற்று
வளைய வந்த தினம்
வெற்றிக்களிப்பில் !
நம்நாட்டு
தியாகிகளின்
இரத்தத்தை
திட்டு திட்டாய்
சிதற வைத்த
இந்திய குடியரசு தினம்!
தினம் தினம்
போற்றிக் கும்பிடுவோமே!
அந்த வீரர்களின் தியாகத்தை !
ஜனவரி 26
ல் -
புதிய
ஜனனம் எடுத்த
இந்திய மண்ணில்
இனவெறி மதவெறி
மறைந்ததா ?
மறையவில்லையே இன்னும்!
மதியோடு செயல்படுவோம் !
மதயானையாய் செயல்படவேண்டாம்,
வேற்று மத மனிதனிடம்
நண்பனாய்
நட்பாய்
நடைபோடுவோம்
இருவரும் இணைந்தே
இறுதிவரை !
‘வந்தே
மாதரம்’
எனும்
மந்திரத்தை
வறுமை மக்களுக்கும்
வலிய போய்ப் போதிப்போம்!
மகிழ்ச்சி பல
மனதில் கண்டிடுவோம்! !
ஜெய்ஹிந்த் !
ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !
ஜெய்ஹிந்த் !!
ஜெய்ஹிந்த் !
ஜெய்ஹிந்த் !!



