Wednesday, January 23, 2013

வா தோழா , சாதனை படைப்போம் !!


கவிதை       

வா தோழா , சாதனை படைப்போம் !!












ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.


வா தோழா , சாதனை படைப்போம் !!
வாஞ்சையுடன் வந்திடு,
சாதனை படைத்திடுவோம் !!
காலம் நம் கையில்,
கவலை வேண்டாம் தோழா !!
கடமை தவறாமல் உழைத்திடு,
கனி நம் கையில்
கிட்டும் தோழா !!

முனைப்போடு
முந்திக்கொண்டு போராடு,
மேகங்களையெல்லாம்
தொட்டு விடலாம் தோழா !!
வாழ்ந்து சாதிப்போம் என்ற
எண்ணத்துடன் செயல்படு,
வானம் கூட உன் கையில் தோழா !!
உன்னால் நீந்த முடியும்
என்ற நம்பிக்கையில்
இறங்கினால்,
அதிக ஆழமான
ஆற்றைக்கூட கடந்து விடலாம் !!
வா தோழா , சாதனை படைப்போம் !!

No comments:

Post a Comment