கவிதை
இல்லறக் காதல்
கிரன்
கண்ணடித்தேன்; நீ
கனியவில்லை; ஆனால்
கைப்பிடித்தேன் உனை
மணவறையில் மணாளனாய் ;
மதிமயங்கி விட்டாயே !!
அழகிய புடவை
ஒன்றை, ஓராயிரம்
கடைகளில்,
கதிகலங்கி தேர்வு செய்து,
கண்ணே என்று
அன்பளிப்பாய்
அன்புடன் அளித்தேன்;
அணிய மறுத்தாயே நீ !
மிளிர்கிறது நீ உடுத்தியதால்” என்று
உரைத்ததும் நான் - நீ
உறைந்து போய்
மகிழ்ச்சி பொங்க, உந்தனுடன் எனை
அரவணைத்தாயே
அன்பே ! நீ
அன்புடன் என்மீது
காதல் கொண்டதால்தானோ ………
No comments:
Post a Comment