Monday, March 11, 2013

கவிதை - இந்திய தாயே


கவிதை     
  இந்திய தாயே


ஆ. அஞ்சலி தேவி, A ANJALI DEVI,
துணை மேலாளர், DY.MANAGER,
இந்துஸ்தான் பெட்ரோலியம், HINDUSTAN PETROLEUM,
சென்னை, CHENNAI.


இந்திய தாயே  - என்
இதயத்தில் வீற்றிருக்கும்
தாயே…….
இந்திய மண்ணில்
பிறப்பதை விட ;
இந்திய மண்ணுக்காக
பிறந்ததில் பெருமை அடைகின்றேன்  !
இந்திய மண்ணில்
இறப்பதை விட ;
இந்திய மண்ணிலேயே வாழ்ந்து ,
இந்திய மண்ணுக்காக இறப்பதில்
ஆனந்தம் அடைவேன் !!

அமிர்தத்தை எங்களுக்கு
பாலாக வார்ததாய்
அழகிய தாயே ! உன்
புழுதி மண்ணில்
புரளவில்லையென்றால்….
புகழ் ஏது எங்களுக்கு ?
உன் மடியில்
உறங்குவதே
உவகை,உத்தமம் !
உத்தம புத்திரனாய்
வாழ்ந்து , உன்
               புகழ் காப்பேன்
என் இந்திய தாயே….

No comments:

Post a Comment