Monday, April 2, 2012

கிராமியப்பாடல்


கிராமியப்பாடல்




அஞ்சலீ தேவீ, சேண்ணை

Anjali Devi, Deputy Manager,HPCL,Chennai



நித்தம் நித்தம் உன்னை எண்ணி

நெஞ்சுக்குள்ள வெச்சுக்கிட்டு

நெசத்த மறந்துப்புட்டு உன்

நெழலைத்தேடி நிக்கிறேனே

நிக்கிறேனே மாமா நானும்

நிக்கிறேனே மாமோய் // 1 //



ஊரெல்லாம் பொங்கல் வெச்சு

மஞ்சத்தாலி கட்டி வெச்சு

மானமுள்ள பானைகள்தான்

சந்தோஷத்தில் பொங்கியதே

பொங்கியதே மாமாஅட

பொங்கியதேமாமோய் // 2 //


தயங்காம[ல்] தங்கத்தாலி

எங்கழுத்தில் கட்டிப்புட்டு,

என்னை உன்னோடு

ஊர்கூடி,கூட்டிப்போக

தயாராமாமாநீயும்

தயாராமாமோய் // 3 //



அந்திப் பொழுதுலதான்

அகல் விளக்க ஏத்தி வெச்சு,

அன்போடு அகம் குளிர,

உன்னோட வரவுக்குத்தான்

காத்திருந்தேன்

காத்திருந்தேன்மாமா நானும்

காத்திருந்தேன்மாமோய்

என்ஆசைமாமாஅட

என்ஆசைமாமோய் // 4//

No comments:

Post a Comment