Monday, April 9, 2012

பெண் என்பவள் …

பெண் என்பவள் ……








 
- அஞ்சலி தேவி, சென்னை
(Anjali Devi, Deputy Manager,HPCL,Chennai)


 
பெண் என்பவள்

சாதிக்கப் பிறந்தவள்!

பிறரின்

சாபங்களுக்கு

உள்ளாவதற்கு அல்ல!!



பெண்ணினமே ஓ

பெண்ணினமே !!

போராடுவோம் நாம்

ஒருங்கிணைந்து

துணிச்சலுடன்;நமக்கு

எதிரான பிரச்சினைகளை

எதிர்த்து சமுதாயத்தில் !!



நாம் தூங்கப்

பிறந்தவர்கள் அல்ல !!

துக்கமாய் ஒதுங்கி

அமர்ந்திட !!



“அடுப்பூதும் பெண்களுக்கு

படிப்பு எதற்கு”என்று

எழுப்பியகுரல்களை

எதிர்த்துஎழுச்சிக் குரல்

எழுப்பிய பாரதிஅன்று ;

சாதிக்கும் பெண்களுக்கு

சரஸ்வதிக்கு சமானமாக

சிலை

வடித்திருந்திருப்பார் இன்று !!



மதர் தெரேசா, ஒரு

அகில உலகமும்

போற்றும் அன்புத்தாய் !!!



பி.டி.உஷா அனைவருக்கும்

பிடித்தமான ஒரு

வினளயாட்டு வீராங்கணை !!



ராணி லக்குமிபாய்

அந்நிய நாட்டு

ராட்சசர்களை

அடித்து விரட்டி

லட்சியம் படைத்த

ஒரு வீரப்பெண்மனி

நமது சுதந்திர

வரலாற்றில் !!!



சானியா மிர்சா

சாதனைக் கொம்பை

எட்டிய

இளமைப் பெண்மனி

டென்னிஸ் விளையாட்டில் !!!


சாதனைப் பட்டியலில்
பலபேர்!!! நாமும்
சாதிக்கப் பிறந்தோரே ;
சந்திப்போம் பிரச்சினைகளை
சவாலாய் ;
சாதிப்போம் !!!
சாதனை படைப்போம் !!!
வாருங்கள்!!! என் இந்தியச்
சகோதரிகளே …………….

No comments:

Post a Comment